துணை முதல்வர் பட்ஜெட்டை வாசித்து கொண்டிருக்கும்போது திமுகவினர் கூச்சல்.. குழப்பம்.!

துணை முதல்வர் பட்ஜெட்டை வாசித்து கொண்டிருக்கும்போது திமுகவினர் கூச்சல்.. குழப்பம்.!

Update: 2021-02-23 11:11 GMT

துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை வாசித்து கொண்டிருக்கும்போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கூச்சல் போட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டின் இந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 11 மணிக்கு வாசிக்க தொடங்கினார். அப்போது திமுகவின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் வேண்டும் என்றே எழுந்து ஒருவிதமான பதற்றத்தை உருவாக்கும் விதமாக பேசினார்.

அப்போது அவருக்கு சபாநாயகர் தனபால் தேவையில்லாமல் பேச வேண்டாம். தயவு செய்து இருக்கையில் அமருங்கள் என கூறினார். ஆனால் எதிர்க்கட்சியினர் வேண்டும் என்றே கூச்சலிட்டு வருகின்றனர். இதற்கு காரணம் திமுக தலைவர் ஸ்டாலின்தான் என அதிமுகவின் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Similar News