தமிழக பெண்களின் இடுப்பு இப்படியா இருக்கணும்: வக்கிர புத்தியுடன் பேசிய திமுக பேச்சாளர் லியோனி.!
தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு ஆதரவாக லியோனி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய லியோனி, வெளிநாட்டு மாட்டு பாலை குடித்து, குடித்து நம்ம தமிழக பெண்கள் பலூன் மாதிரி பெருத்து போயிட்டாங்கா.
பட்டிமன்றத்தின் மூலம் பிரபலமான திண்டுக்கல் லியோனி திமுகவில் பேச்சாளராக உள்ளார். இவர் பெண்களை பற்றி மிகவும் அறுவறுக்கத்தக்க வகையில் பேசிய பேச்சு ஒட்டு மொத்த பெண்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கோவை, தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு ஆதரவாக லியோனி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய லியோனி, வெளிநாட்டு மாட்டு பாலை குடித்து, குடித்து நம்ம தமிழக பெண்கள் பலூன் மாதிரி பெருத்து போயிட்டாங்கா.
அவர்களின் பிள்ளைகளும் அதே போன்று பெருத்து போயிட்டாங்கா. ஒரு காலத்துல பெண்களோட இடுப்பு 8 மாதிரி இருக்கும், குழந்தைகளை தூக்கி இடுப்புல வச்சா அப்படியே உட்கார்ந்துக்குவாங்க என்று மிகவும் அறுவருக்கத்தக்க வகையில் பேசினார்.
அவரது பேச்சை கேட்ட பெண்கள் ஒரு சில நிமிடங்கள் மவுனமாக மாறிட்டனர். இதனையடுத்து அவரது பேச்சை திசை திருப்ப திமுகவினர் முயற்சி செய்தனர். ஆனாலும் மீண்டும் பெண்களின் இடுப்பு பற்றியே பேசினார். அவரது பேச்சு ஒட்டுமொத்த திமுகவினருக்கு முகம் சுழிக்க வைத்தது. பெண்களை மதிக்கும் தமிழகத்தில் இப்படியும் பேசுபவர்கள் என்றால் அது திமுகவினர் மட்டுமே என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பெண்களை தொடர்ந்து திமுகவினர் தவறாக விமர்சனம் செய்வதை குறிக்கோளாக வைத்துள்ளனர். எனவே அது போன்ற கட்சிகளை பெண்கள் முற்றிலும் புறந்தள்ள வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் இது போன்ற பேச்சாளர்களை ஊக்கப்படுத்தி வருகின்றார். அவர் இதனை கண்டிப்பது இல்லை என்பதே ஊரறிந்த உண்மையாகவும் உள்ளது.