இலவச மொட்டை ! விநாயகர் சிலை சேதம் ! இதுவே தி.மு.க வின் சதுர்த்திப் பரிசு !
DMK's Petty Politics.;
மராட்டிய மன்னன் சிவாஜி ராவ் தம் மக்களிடம் தேசிய எண்ணத்தை ஊட்ட விநாயகர் சதுர்த்தியை மதப் பண்டிகையாக மட்டுமில்லாமல் தேசிய எண்ணம் கொண்ட மக்களை ஒன்றிணைக்கவும் இந்தப் பண்டிகையைப் பயன்படுத்திக்கொண்டார்.
சிவாஜிராவ் கையாண்டதை முன்னுதாரணமாக கொண்டு விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பிரிட்டிஷாருக்கு எதிராகவும் அதே இந்திய தேசிய எண்ணம் கொண்ட மக்களை ஒருங்கிணைத்து தேச விடுதலைக்காக விநாயகர் அருளால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கொண்டாடப்பட்டது.
சிவாஜிராவ் முகலாயர்களை எதிர்த்தும் , திலகர் ஆங்கிலேயர்களை எதிர்த்தும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை தேசிய ஒருமைப்பாட்டை காப்பதற்காக ஒரு அரணாக பயன்படுத்தினர்..
இப்படி ஒரு தேசிய வரலாற்று பின்புலம் கொண்ட இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை தமிழ்நாட்டில் தடை செய்தது திமுக அரசு !
இந்துக்கள் தாங்கள் தங்கள் இல்லங்களிலேயே விநாயகரை வழிபடலாம் என்றும் அனுமதி அளித்ததை பெருந்தன்மையாக உணர்ந்தது திமுக அரசு !
இப்படி இருக்க. கரூரில் விநாயகர் சிலையை தமிழக காவல்துறையினர் சேதப்படுத்தியுள்ளனர். இந்த காவல்துறையின் கண்ணியமற்ற செயலை கண்டித்து தமிழக பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் ட்விட் செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது " கரூரில் விநாயகர் சிலையை உடைத்து காவல்துறை அத்துமீறல்! காவல்துறை
கண்ணியம் பறந்தது காற்றில். அனைத்து மதங்களையும் மாண்புடன் மதிக்கும் பாஜகவில் உள்ளது மதச்சார்பின்மை. ஒரு சாராரை வாழ்த்தி ஸ்டாலின் அவர்கள் இந்துக்களைத் தாழ்த்துவதா மதச்சார்பின்மை? இதுவா மதநல்லிணக்கம்? "