'ஸ்டாலினோட தி.மு.க அத்தியாயம் முடியப்போகுது, சின்னவர்'லாம் இங்க தாங்கமாட்டார்' - ஹெச்.ராஜா அதிரடி

'தி.மு.க'வின் அத்தியாயம் ஸ்டாலினோடு முடிகிறது, சின்னவர் என்பவர் தி.மு.க'வை வழிநடத்த மாட்டார்' என பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

Update: 2022-09-20 08:49 GMT

'தி.மு.க'வின் அத்தியாயம் ஸ்டாலினோடு முடிகிறது, சின்னவர் என்பவர் தி.மு.க'வை வழிநடத்த மாட்டார்' என பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.


பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை திலகர் தெரு பாரதிய ஜனதா கட்சி சார்பில் கபடி போட்டி நடைபெற்றது, இதில் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


அதில் கலந்து கொண்ட பேசி அவர் கூறியதாவது, 'இந்துக்களை அமவதிக்கும் வகையில் பேசிய தி.மு.க எம்.பி ஆண்டிமுத்து ராசா மீது பல்வேறு இடங்களில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது, நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு வழக்கு தொடர்வோம்' என்றார்.


மேலும் பேசிய அவர், 'வக்பு வாரிய சட்டத்தை வைத்துக்கொண்டு தற்போது பல்வேறு சர்ச்சைகளை கிளம்பி உள்ளன ஒரு இன்ச் இடத்தை கூட அவர்களுக்கு வழங்க பா.ஜ.க அனுமதி அளிக்காது. தி.மு.க அத்தியாயம் என்பது ஸ்டாலின் உடன் முடிவடைகிறது சின்னவர் என்பவர் தி.மு.க'வை வழிநடத்த மாட்டார்' என கூறினார். 


Source - Junior Vikatan

Similar News