கமிஷன்ல குறியா இருக்குறீங்களே, ஒரு புத்தக திருவிழா ஒழுங்கா நடத்த தெரியுதா? - தி.மு.க அரசிடம் கேள்வி எழுப்பும் அண்ணாமலை
கரூரில் நடந்த புத்தக கண்காட்சியில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக இருந்ததால் அரசுக்கு ஒன்றரை கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கரூரில் நடந்த புத்தக கண்காட்சியில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக இருந்ததால் அரசுக்கு ஒன்றரை கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது தமிழக அரசு சார்பில் கரூரில் புத்தக திருவிழா ஏற்பாடு நடத்தப்பட்டு வருகிறது எதற்கெடுத்தாலும் விளம்பரம் செய்யும் அரசு தற்போது கரூரில் புத்தக திருவிழா நடைபெறுவதை மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்திருந்தது. ஆனால் ஏற்பாடுகளை சரியாக பொறியாளர்கள் கவனிக்காமல் விட்டதன் பலனாக ஒரே நாள் மழையில் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் மழைநீரில் நனைந்தது வீணாக போயின.
இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் பரவலாக உலா வருகிறது. இதனை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கமிஷனில் குறியாக இருக்கும் இந்த அறிவாலய அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய புத்தக விற்பனையாளருக்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.