அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கிய 50,000 மின் இணைப்புகள் மீது சந்தேகம் உள்ளது, வெள்ளை அறிக்கை வெளியிட தைரியம் உள்ளதா - பா.ஜ.க போடும் கிடுக்கிப்பிடி

அரவக்குறிச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கிய மின் இணைப்புகளுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-15 03:10 GMT

அரவக்குறிச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கிய மின் இணைப்புகளுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றினால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கிய நிகழ்ச்சியில் ஐம்பதாயிரம் நபர்களுக்கு மட்டுமே மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை, அதில் ஒரு புத்தகமே வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பயனாளிகளில் விசாரணைக்காகவும், தட்கல் முறையிலும், 2 லட்சம் பணம் கட்டியவர்களும் அடங்குவர். எனவே முழு தகவல் அடங்கிய வெள்ளை அறிக்கையை தர வேண்டும் என தெரிவித்தார்.

மத்திய அரசின் திட்டங்களில் தமிழக தி.மு.க அரசு தனது ஸ்டிக்கர் ஒட்டி நாடகமாடுகிறது, அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு முதல்வர் இங்கு வந்து சர்டிபிகேட் கொடுக்கிறார், இதே செந்தில் பாலாஜி தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே ஒருமுறை சர்டிபிகேட் கொடுத்துள்ளார். மணல் திருடன், பல கட்சி மாறுகின்ற ஆள் என்றல்லாம் கூறினார்' என முதல்வர் செந்தில்பாலாஜி பற்றி பேசிய அனைத்தையும் பட்டியலிட்டார்.



Source - Asianet News 

Similar News