அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை அமுத சுரபி.. தருமபுரியில் ராமதாஸ் பேச்சு.!
பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜி.கே.மணியை ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தருமபுரிக்கு நேற்று இரவு வருகை புரிந்தார். அவர் அதிமுக, பாமக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜி.கே.மணியை ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பொதுமக்களிடையே பேசும்போது, அதிமுக தேர்தல் அறிக்கை ஒரு அமுத சுரபி, அமுத சுரபி என்றால் அள்ள அள்ள வந்துகொண்டே இருக்கும். அது போன்றுதான் பல்வேறு நலத்திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு டெபாசிட் கூட கிடைக்கக்கூடாது.
அனைவரும், அதிமுக கூட்டணியில் நிற்கும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.