சிறுவாணி அணை தூர்வாருவது பற்றி பட்ஜெட்டில் இடம்பெறவில்லை: வானதி சீனிவாசன்!

Update: 2022-03-23 11:57 GMT

சிறுவாணி அணை தூர்வாருவது பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மீதான விவாதம் இன்று (மார்ச் 23) மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பேசுகையில், சிறுவாணி அணையைத் தூர்வாருவது பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றார்.

மேலும், கோவை மாநகராட்சியில் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும் பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் மோசமான நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டினார். இது பற்றி கோரிக்கை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

Source: News 7 Tamil

Image Courtesy: The Covai Post

Tags:    

Similar News