அரசியல் கட்சிகளின் சின்னம் பொருத்தும் பணி.. கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு.!
உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தனது பணியை வேகமாக செய்து வருகிறது.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.
அந்த பணியினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான கிரண் குராலா இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார். உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.
உடன் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் சி.விஜய்பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.