விடாமுயற்சி.. தேர்தல் மன்னன் பத்மராஜன் எடப்பாடி, மேட்டூரில் 216வது முறையாக மனுதாக்கல்.!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பத்மராஜன் இதுவரை 216 முறை தேர்தலில் மனுத்தாக்கல் செய்து சாதனை செய்துள்ளார்.

Update: 2021-03-13 05:33 GMT

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பத்மராஜன் இதுவரை 216 முறை தேர்தலில் மனுத்தாக்கல் செய்து சாதனை செய்துள்ளார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் 60, இவர் பழைய டயர்களை புதுப்பித்து விற்கும் தொழில் செய்கிறார். 8வது வரை படித்துள்ளார். இவர் உள்ளாட்சி தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை மனுத்தாக்கல் செய்து பிரபலம் அடைந்துள்ளார். இவருக்கு 'தேர்த்ல மன்னன்' என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளனர்.




 


மனுத்தாக்கல் மட்டுமே செய்வார் ஆனால் வெற்றிப்பெற்றதில்லை. ஆனாலும் விடா முயற்சியுடன் தொடர்ந்து போட்டியிடுவதை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பத்மராஜன் மேட்டூர் மற்றும் எடப்பாடி ஆகிய 2 தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்.




 


தற்போது இவர் போட்டியிடுவது 216 முறை மனுத்தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார். இதுவரை 100 முதல் 200 வாக்குகள் வரை அவர் பெற்றுள்ளார்.

Similar News