சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பா.ம.க. இன்று ஆலோசனை.!
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
அதே போன்று அதிமுக கூட்டணியில் முதலில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போட்டியிடக்கூடிய தொகுதிகளின் உத்தேச பட்டியலையும் பாமக அதிமுக தலைமையிடம் கொடுத்திருந்தது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் குறித்து பாமக இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரத்தை எந்த வகையில் முன்னெடுக்க உள்ளோம் என்பது பற்றியும் ஆலோசனை செய்யப்படும் என கூறப்படுகிறது.