ச.ம.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கட்சியின் தலைவர் சரத்குமார் போட்டியிடவில்லை.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுகிறது.

Update: 2021-03-15 14:24 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுகிறது.

சமத்துவ மக்கள் கட்சிக்கு தென்காசி, ஆலங்குளம், நெல்லை, உள்ளிட்ட 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்சியின் 37 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை சரத்குமார் வெளியிட்டார். அந்த பட்டியலில் அவரது பெயர் இல்லை.

அதன்படி:

தூத்துக்குடி- என்.சுந்தர்

மதுரை தெற்கு - ஈஸ்வத்

விளாத்திகுளம் - வின்சன்

தென்காசி -தங்கராஜ்

ராஜபாளையம் - விவேகானந்தன்

சிவகங்கை -ஜோசப்

அம்பாசமுத்திரம் -கணேசன்

கடலூர் -ஆனந்தராஜ்

வாசுதேவநல்லூர் -சின்னசாமி

விருதுநகர் -மணிமாறன்

திருச்செங்கோடு - ஜனகராஜ்

நாங்குநேரி - சார்லஸ் ராஜா

இந்த முதற்கட்ட பட்டியலில் சரத்குமார் பெயர் இல்லை என்பதால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த முறை எம்.பி. தேர்தலில் கமல் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News