அனைவரும் பாஸ்.. முதலமைச்சர் அறிவிப்புக்கு மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.!

அனைவரும் பாஸ்.. முதலமைச்சர் அறிவிப்புக்கு மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.!

Update: 2021-02-26 16:54 GMT

சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ், 9,10, மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அரசு பள்ளி மாணவர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். கொரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு பாடம் சரிவர நடத்த முடியால், ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வந்தது. இதனிடைய தற்போது 9,10 மற்றும் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது.

இதனிடையே முதலமைச்சர் 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். 9,10,11 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள் என அறிவித்தார். அவரது அறிவிப்பு அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

Similar News