தி.மு.க. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் செயல் வெட்கக்கேடானது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு ட்விட்.!
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் ஆய்வு பணிக்காக வந்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் படகில் இருந்து இறங்கி தண்ணீரில் கால் வைக்க தயக்கம் காட்டியதால் மீனவர் இடுப்பில் வைத்து தூக்கிச்சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் மட்டுமின்றி அரசியல் கட்சித்தலைவர்களிடமும் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அதிமுக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: கடல்தாயின் அலைக்கரங்கள் காலில் தழுவுவதைக் கூட தாங்க முடியாத ஒருவரா? மீன்வளத்துறைக்கு அமைச்சர்.. வெட்கக் கேடு.. என்று குறிப்பிட்டுள்ளார்.