'தமிழகத்தில் அந்நிய சக்தி' - அண்ணாமலை குறிப்பிட்டது யாரை?
தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க விடாமல் அந்நிய சக்தி தடுத்து வருத்துகிறது என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க விடாமல் அந்நிய சக்தி தடுத்து வருத்துகிறது என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள குறிப்பில், 'தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத ஒரு அரசு எரிபொருள் விலை குறையவில்லை என வருத்தப்படுவது ஏன்? பெட்ரோல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் டீசலுக்கு 4 குறைத்து வாக்குறுதி நிறைவேற்றினால் விலை தாமாக குறையும் ஆனால் விலையை குறைக்க விடாமல் தமிழகத்தில் ஒரு அந்நிய சக்தி தடுத்து வருகிறது' என அண்ணாமலை குறிப்பிட்டுளார்.
தமிழகத்தில் அந்நிய சக்தி என அண்ணாமலை குறிப்பிட்டது யாராக இருக்கும் என சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்து வருகிறது.