கோவையில் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா இண்டக் ஷன் ஸ்டவ்: பா.ஜ. வேட்பாளர் வானதி சீனிவாசன் அறிவிப்பு.!
இவரது அறிவிப்பு கோவை தெற்கு தொகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுவும் பெண்கள் மத்தியில் அமோக ஆதரவு எழுந்துள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதே போன்று கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் களம் இறங்குகிறார்.
அவர் தனது தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். தற்போது தான் தேர்தலில் வெற்றி பெற்றால் விலையில்லா, 'இண்டக் ஷன் ஸ்டவ்' இலவசமாக இல்லத்தரசிகளுக்கு வழங்குவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
இவரது அறிவிப்பு கோவை தெற்கு தொகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுவும் பெண்கள் மத்தியில் அமோக ஆதரவு எழுந்துள்ளது. பெண்களுக்குத்தான் தெரியும் சமையலுக்கு எந்த பொருள் தேவை என்று, அதனை உணர்ந்து பெண் வேட்பாளரான வானதி சீனிவான் இண்டக்ஷன் ஸ்டவ் அறிவித்துள்ளார்.