'ம்ஹும்! இனிமே செல்பி வேலைக்காகாது! வண்டிய எடுப்பா கள ஆய்வுக்கு போவோம்' - முதல்வர் ஸ்டாலினின் அரசியல் கணக்குகள்!

'ம்ஹும்! இனிமே செல்பியும் வேலைக்காகாது! விளம்பரமும் வேலைக்காகாது!' என நினைத்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளார்.

Update: 2023-01-31 01:19 GMT

'ம்ஹும்! இனிமே செல்பியும் வேலைக்காகாது! விளம்பரமும் வேலைக்காகாது!' என நினைத்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடித்து இரண்டு வருஷம் ஆச்சு! இந்த இரண்டு வருடங்களில் திரும்பிப் பார்த்தால் திமுக என்ன செய்தது என்றால் சொன்னது வேற, செஞ்சது வேற'

சொன்னது திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும்! மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்! இதுவரை தமிழகம் பார்க்காத இல்லாத ஆட்சியை திமுக வழங்கும் அப்டின்னு சொன்னாங்க, ஆனால் நடந்தது என்னான்னு பார்த்தீங்கன்னா நில அபகரிப்பு! போதை பொருள் புழக்கம்!பெண்கள் மீதான வன்கொடுமை அதிகரிப்பு! பட்டியல் இனத்தவர்கள் மீதான வன்கொடுமை அதிகரிப்பு! வாக்குறுதிகளுக்கு ஏமாந்து மக்கள் போராட்டம்! இதுதான் நடந்தது.

இது இப்படி இருக்கும்போது மறுபுறம் களத்தில் திமுகவின் அமைச்சர் மற்றும் எம்பிக்கள் மக்களை தங்கள் அடிமைகள் மாதிரி நடத்துற கொடுமை வேற! முன்பெல்லாம் மாதம் ஒருமுறை திமுகவினர் பற்றிய தவறான செய்திகள் மக்கள் மத்தியில் அடிபட்டால் இப்பொழுது வாரம் ஒரு முறை என அதிகரித்து சாதனை படைச்சுருக்காங்க திமுக காரங்க.

கல் எடுத்து அடிக்குறது, மேடையில அடிக்குறது, பொதுவெளியில் கட்சியினரின் பொதுமக்கள் என பார்க்காமல் எல்லாத்தையும் சகட்டுமேனிக்கு திட்றது, இது பத்தாதுன்னு மேடைக்கு மேடை வேற வாய்க்கு வந்ததை பேசி முதல்வர் ஸ்டாலினுக்கு தூக்கமே இல்லாம பண்ணிடுறது!


இது இப்டியே விட்டா வேலைக்காகாது நானே இறங்குறேன் களத்துல, வண்டிய எடுடா'ன்னு முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு கிளம்ப போறாருங்க! முதலமைச்சரின் கள ஆய்வு என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் போன மட்டும்தான் மக்கள் மத்தியில அடுத்த வாட்டி ஒட்டு கேட்டு போக முடியும்னு முதல்வர் தரப்பு ஐடியா போட்டு இந்த வேலைல இறங்கியிருக்காங்க.

இது மட்டுமில்லாம அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வேற வர்றதால இப்டியே போன சென்றால் தமிழகத்தில் 39 தொகுதிகள் ஒரு தொகுதிகளில் கூட திமுக கூட்டணி ஜெய்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என உளவுத்துறை அறிக்கை வேறு முதல்வர்ட்ட சொல்லிருக்காங்க! இதனால் தன் தனக்கு சரிந்துள்ள இமேஜ் தூக்கி நிறுத்தி 2024 தேர்தலில் கணிசமான எம்பி தொகுதிகளை வெற்றி பெற்றத்தான் திமுக பெற காப்பாத்த முடியும்ன்னு திமுக தரப்பு முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் தரப்பு திட்டம் போட்ருக்கு.

போறபோக்குல அமைச்சர்கள், அதிகரிகள்ன்னு ஒரு பெரிய படையே கூட்டிட்டு போய் 4 பேர பார்த்து குறைகேட்டு உடனே நடவடிக்கை எடுத்து அது செய்தியான மட்டும்தான் நாம அடுத்து அரசியல் தமிழ்நாட்டுல பண்ண முடியும், எத்தன நாளைக்குத்தான் ரோட்டுல வாக்கிங் போறது, செல்பி எடுக்குறது, டீ கடைல டீ குடிக்குறது, சைக்கிள் ஓட்றது இப்டி பொழப்பு ஓட்ட முடியும்? மக்கள் என்ன நினைப்பாங்க கொஞ்சம் வேற மாதிரி போவோம்னு முதல்வருக்கு திட்டம் போடுற டீம் கணக்கு போட்ருக்காதா தகவல் கிடைச்சுருக்குங்க!

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் வேலூர் மண்டலத்திலிருந்து ஆரமிக்குறாங்க, முதல்வர் ஸ்டாலின் அங்கு இரண்டு நாட்கள் தங்கி கள ஆய்வு நடத்தப்போறதா தகவல்கள் வந்துருக்குங்க! பார்ப்போம் என்ன நடக்கபோகுதுன்னு!

Similar News