பிரியாணிக்கு காசு கேட்டதால் கடையை உடைத்த தி.மு.க கவுன்சிலரின் கணவர் - இஸ்லாமியர்கள் சாலை மறியலால் பரபரப்பு!

Update: 2022-04-21 12:51 GMT

நாகையில் சாப்பிட்ட பிரியாணிக்கு காசு கேட்டதால் கடையை அடித்து நொறுக்கிய திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கடை உரிமையாளர்கள் திருத்துறைப்பூண்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், திருப்பூண்டி கடைத்தெருவில் ஏ.கே. பிரியாணி கடை உள்ளது. இந்த கடைக்கு திருப்பூண்டி காரைநகர் 3வது வார்டு உறுப்பினர் ஞானசுந்தரி கணவர் சுரேஷ் மற்றும் சிபிஐ கட்சியை சேர்ந்த சிலர் சாப்பிட்டுள்ளனர். இதன் பின்னர் சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கேட்ட ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். கடை உரிமையாளர் இல்லாதததை அறிந்த சுரேஷ் பணம் தரமுடியாது என்று கூறியுள்ளார்.

இதன் பின்னர் அங்கு பணியில் இருந்து பெண் ஊழியரிடம் ரகளையில் ஈடுபட்டது மட்டுமின்றி சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் கடையை அடித்து நொறுக்கினர். இது பற்றி மற்ற கடை உரிமையாளர்கள் கேள்விப்பட்டு உடனடியாக கடையை அடித்து நொறுக்கிய சுரேஷ் மற்றும் சிபிஐ கட்சியை சேர்ந்தவர்ளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அவர்களுடன் இஸ்லாமிய அமைப்புகளும் களம் இறங்கியது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சாப்பிட்ட பிரியாணிக்கு காசு கொடுக்காமல் கடையை உடைத்த திமுக கவுன்சிலரின் கணவரின் செயல் கடை உரிமையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source,Image Courtesy: Abp


Tags:    

Similar News