உதயநிதியை பேசினால் ஸ்டாலினுக்கு ரத்த அழுத்தம் உயர்கிறது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:

Update: 2021-04-03 11:01 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் அனல் பறக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை மற்றும் நெல்லையில் பாஜக, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அதே போன்று நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:


பிரதமர் மோடி விவசாயிகள், மற்றும் மீனவர்கள் நலன் சார்ந்து சிந்திக்கிறார். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை மட்டும் நினைத்து கவலை கொள்கிறார். தனது மகனை முதலமைச்சராவதை பற்றி சிந்தித்து வருகிறார். மாநில வளர்ச்சியை பற்றி நினைப்பவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமா? அல்லது மகனை முதலமைச்சர் ஆக்க நினைக்கும் நபருக்கு ஆதரவு அளிக்க வேண்டுமா? என்று தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்.


நான் உதயநிதியை பற்றி பேசும்போதெல்லாம் ஸ்டாலின் கோபப்படுகிறார். அவரது ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் தனது அமைதியை இழந்து யாரைப் பற்றி பேசுவது என்று தெரியாமலே பேசி வருகிறார். அதிலும் மறைந்த தலைவர்கள் குறித்தும் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் விமர்சனம் செய்து வருகின்றனர்.




பிரதமர் மோடி மற்றும் பாஜக, அதிமுகவினர் தலித்துகளின் எண்ணங்களை புரிந்து கொள்கிறார்கள். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் உயர்ந்த பதிவியில் (ஜனாதிபதியாக) அமர்ந்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News