'தி.மு.க மாதிரி 1000 ரூபாய் கொடுக்கணும்னா கொள்ளைதான் அடிக்கணும்' - தெரியாமல் உண்மையை உளறி கொட்டிய ப.சிதம்பரம்

ஆயிரம் ரூபாய் வேணும்னா கொள்ளை அடிச்சா தான் கொடுக்க முடியும் என ப.சிதம்பரம் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-01-03 11:04 GMT

ஆயிரம் ரூபாய் வேணும்னா கொள்ளை அடிச்சா தான் கொடுக்க முடியும் என ப.சிதம்பரம் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்ட மானாமதுரை காங்கிரஸ் அலுவலகத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய 'ப.சிதம்பரம் கட்சியினருக்கு வாக்குச்சாவடிகளை சீரமைக்க வேண்டும், அதற்கு குழு ஏற்பாடு செய்யுங்கள்' என கூறி பேசியுள்ளார்.

அப்போது நகர தலைவர் எம்.கணேசன் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மானாமதுரை வந்து கட்சி கொடியை ஏற்றினார். ஆனால் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கவில்லை என புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக ப.சிதம்பரம் விசாரித்துக் கொண்டிருந்த நிலையில் கட்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மானாமதுரையில் காங்கிரஸ் கட்சியினர் இரு பிரிவாக கொடியேற்றி விழா நடத்துகின்றன கட்சி அலுவலகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு எங்களை அழைப்பதில்லை என்று கூறினார், அப்போது கட்சியினருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் ப.சிதம்பரம் முன்னிலையில் சண்டை முற்றியது.

உடனே ப.சிதம்பரம் தலையிட்டு கட்சியினரை சமாதானம் செய்து அமைதிப்படுத்தினார். அப்போது எழுந்து பேசிய காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிக்கு ஒருவர், 'கடந்த தீபாவளியை முன்னிட்டு தி.மு.க'வில் 27 வார்டுகளிலும் தி.மு.க நிர்வாகிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நமது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு 100 ரூபாய் கூட கொடுக்க கூடாதா?' என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ப.சிதம்பரம் கொள்ளையடித்தால் தான் நமது கட்சி நிர்வாகிகளுக்கு பணம் கொடுக்க முடியும், காண்ட்ராக்ட் எடுத்து அதில் 10% கமிஷன் வாங்கி கொடுக்க சொல்றீங்களா? என கேட்க இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது தி.மு.க'வை போல் பணம் கொடுத்தால் என்ன என நிர்வாகி கேட்டதற்கு கொள்ளையடித்தால்தான் பணம் கொடுக்க முடியும் என ப.சிதம்பரம் கூறியது அப்போ தி.மு.க கொள்ளை அடிக்கிறது என மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால் இது குறித்து திமுக தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை, கூட்டணி காட்சியாகிய தி.மு.க'வை பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் கொள்ளையடிக்கிறார்கள் என கூறியது காங்கிரஸ், தி.மு.க இடையிலான விரிசலை காட்டுகிறது எனவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.



Source - News J 

Similar News