இலவச கேஸ் வாங்கித் தருவதாக கூறி இளைஞர் காங்கிரஸில் சேர்த்து விட்ட மோசடி.- பொதுமக்கள் ஆவேசம்.! #Kanyakumari #INC

Update: 2021-12-06 00:30 GMT

கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியின் தகிடுதத்தங்களை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. பிரதமர் மோடியின் வெற்றி திட்டமான இலவச கேஸ் இணைப்பு (உஜ்வாலா) திட்டத்திற்காக நபர்களை இணைப்பதாக கூறிக்கொண்டு சில காங்கிரஸ் பிரமுகர்கள் இளம்பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்கள், தொலைபேசி எண்கள், ஆதார் எண் என பலவற்றை சேகரித்தனர்.

ஆனால் இணைப்பைப் பெற்று வாங்கி கொடுப்பதற்கு பதிலாக இளம்பெண்ககளை அவர்களுக்கு தெரியாமலேயே இளைஞர் காங்கிரஸில் உறுப்பினர்களாக இணைத்துள்ளனர். இளைஞர் காங்கிரஸில் இணைந்துள்ளதாக தங்களுக்கு வந்த மொபைல் செய்திகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளம் பெண்களில் பலரும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார்அளித்தனர்.



சம்பந்தப்பட்ட நபர்களை (காங்கிரஸ் பிரமுகர்கள்) காவல்துறையினரிடம் கொண்டு சென்று ஒப்படைத்தனர். அங்கு வந்த பொதுமக்கள் இளம் பெண்களின் புகைப்படங்கள் வீடியோக்கள் தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருப்பதை சுட்டிக் காட்டி அவரை கைது செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட மொபைல் போன்களை மற்றும் தகவல்களை அழிக்க வேண்டும் என்றும் காவல்துறையினரிடம் கோரினர்.

தேசிய அளவில் இதேபோன்று காங்கிரஸ் கட்சியில் இணைப்பதற்காக நடந்த தில்லுமுல்லுகள் நினைவிருக்கலாம். காங்கிரஸ் பிரமுகர்கள் உறுப்பினர் டார்கெட் நிறைவேற்ற இத்தகைய தகிடுதத்தங்களில் இணைந்து விட்டார்கள் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

Tags:    

Similar News