'ட்விட்டரில் மட்டும் கட்சி நடந்தால் போதுமா? ராகுல் உருப்படியா எதையும் செய்யவில்லை' - போட்டு தாக்கும் குலாம் நபி ஆசாத்

அடுத்த 40 ஆண்டுகளுக்கு அவர்களால் எதையும் பெரிதாக செய்ய முடியாது என காங்கிரஸிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-30 02:44 GMT

அடுத்த 40 ஆண்டுகளுக்கு அவர்களால் எதையும் பெரிதாக செய்ய முடியாது என காங்கிரஸிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஒருவராக கருதப்பட்ட குலாம் நபி ஆசாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பிறகு முதன்முறையாக இப்பொழுது பேட்டி அளித்துள்ளார்.

அவர் அந்த பேட்டியில் நிறைய காரணங்களை கூறியுள்ளார் குறிப்பாக காங்கிரஸ் கட்சி இப்போது துதி பாடுபவர்களின் கூட்டமாகவும், ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்களின் கூட்டமாகவும் இருக்கிறது. ராகுல் காந்தி எப்போதும் இளம் தலைவர்கள் வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறார், அப்படியென்றால் வயதானவர்களால் பலன் இல்லை என அர்த்தமா என கேள்வி எழுப்பி உள்ளார்.

ராகுல் காந்தி கட்சியை நடத்தும் விதம் மூலம் ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற்றது கிடையாது, 2013 முதல் ராகுல் காந்தி அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார். நாங்கள் பஸ்களிலும், லாரிகளிலும் பயணம் செய்து காயம் அடைகிறோம் ஆனால் நீங்கள் ட்விட்டரில் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் ட்விட்டரில் கட்சியை நடத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது அடுத்த 40 ஆண்டுகளில் ராகுல் காந்தியால் காங்கிரஸ் கட்சியில் பெரிதாக எதையும் செய்ய முடியாது என்னையோ அல்லது என்னை போன்றவர்களையோ பயன்படுத்திக் கொண்டார்களா? காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்னும் பலர் வெளியேறுவார்கள் சுயமரியாதை இருப்பவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.



Source - Junior Vikatan

Similar News