சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஜூனியர் எம்.ஜி.ஆர்.!

தற்போது வரும் சட்டமன்ற தேர்தல் யாரும் எதிர்பார்க்காத வகையில் அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர்களான ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத சட்டமன்ற தேர்தல் இதுவாகும்.

Update: 2021-03-03 10:24 GMT

தற்போது வரும் சட்டமன்ற தேர்தல் யாரும் எதிர்பார்க்காத வகையில் அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர்களான ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத சட்டமன்ற தேர்தல் இதுவாகும்.

புதிய கட்சிகள் பல முளைத்துள்ளது. அதே போன்று அதிமுகவும் தங்கள் பலத்திற்காக கூட்டணிகளை இறுதி செய்து வருகிறது. திமுகவில் இன்னும் கூட்டணி உறுதி செய்யப்படாமல் தவித்து வருவதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின். பேரன் ராமச்சந்திரன் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்துள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ஆலந்தூர், பல்லாவரம், ஆண்டிபட்டி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்துள்ளேன். அதில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் நான் வெற்றிபெறுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. அப்படி வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால், தனித்து போட்டியிட மாட்டேன். நான் கடைசி வரை இரட்டை இலை சின்னம் இருக்கும் பக்கம் தொடர்ந்து கட்சி பணியாற்றி வருவேன். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News