உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாரான கமல்ஹாசன்: கட்சிக்கு 9 புதிய நிர்வாகிகள் நியமனம்.!

புதிய நிர்வாகிகளாக பழ கருப்பையா அரசியல் ஆலோசகராகவும், பொன்ராஜ், வெள்ளைச்சாமி அரசியல் ஆலோசகராகவும், ஏ.ஜி.மௌரியா துணைத் தலைவர் கட்டமைப்பு, தங்கவேலு, துணைத் தலைவர் களப்பணி மற்றும் செலய்படுத்துதல், செந்தில் ஆறுமுகம் மாநிலச் செயலாளர் தகவல் தொழில்நுட்பம், செய்தித் தொடர்ப்பு.

Update: 2021-06-26 07:37 GMT

மக்கள் நீதி மய்யம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்து. இதனையடுத்து அந்த கட்சியில் இருந்த மகேந்திரன், சந்தோஷ் பாபு, முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியை விட்டு விலகினர். இதனால் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதற்காக கடந்த 24ம் தேதி காணொலிக் காட்சியின் மூலமாக கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.




 


இந்நிலையில், இன்று (ஜூன் 26) நடந்த இணையவழி ஆலோசனையில் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கட்சி நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தங்களது உடல்நலனில் அக்கரை செலுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.




 


நமது கட்சியை வலுப்படுத்தவும், நமது கொள்கைகளை செயல் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளேன் என கூறினார். அதன்படி, கட்சியின் தலைவர் என்ற பொறுப்புடன் கூடுதலாகக் கட்சியின் பொதுச் செயலாளர் எனும் பொறுப்பினையும் ஏற்றுப் பணியாற்ற இருக்கிறேன்.




 


மேலும், புதிய நிர்வாகிகளாக பழ கருப்பையா அரசியல் ஆலோசகராகவும், பொன்ராஜ், வெள்ளைச்சாமி அரசியல் ஆலோசகராகவும், ஏ.ஜி.மௌரியா துணைத் தலைவர் கட்டமைப்பு, தங்கவேலு, துணைத் தலைவர் களப்பணி மற்றும் செலய்படுத்துதல், செந்தில் ஆறுமுகம் மாநிலச் செயலாளர் தகவல் தொழில்நுட்பம், செய்தித் தொடர்ப்பு.

சிவ.இளங்கோ மாநிலச் செயலாளர் கட்டமைப்பு, சரத்பாபு மாநிலச் செயலாளர் - தலைமை நிலையம், ஸ்ரீப்ரியா சேதுபதி நிர்வாகக் குழு உறுப்பினர், ஜி.நாகராஜன் நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர் என நியமனம் செய்யப்படுகின்றனர் என்று கூறினார்.

Similar News