'ஈ.வே.ரா சிலையில் உள்ள வாசகம் தான் தண்டிக்கப்படவேண்டிய வாசகம்' - ஜாமீன் மனுவில் கனல் கண்ணன் சரமாரி கேள்வி
'கோவிலுக்கு வெளியில் பெரியார் சிலை வைத்தவர்களை ஏன் கைது செய்யவில்லை?' என தனது ஜாமீன் மனுவில் கனல் கண்ணன் அதிரடியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
'கோவிலுக்கு வெளியில் பெரியார் சிலை வைத்தவர்களை ஏன் கைது செய்யவில்லை?' என தனது ஜாமீன் மனுவில் கனல் கண்ணன் அதிரடியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
பெரியார் சிலை குறித்து பேசிய வழக்கில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது அவர் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தான் பேசியதில் இந்நாட்டின் சட்டத்துக்கு புறமானது எதுவும் இல்லை எனவும் ஏன் கோவிலுக்கு வெளியில் பெரியார் சிலை வைத்தவர்களை கைது செய்யவில்லை எனவும் தனது மனுவில் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் சிலையில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் தான் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் கோவிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளது என கனல் கண்ணன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு வரும் திங்கட்கிழமை நீதிபதி முன் விசாரணைக்கு வருகிறது.