ஏன் சுதந்திரத்தின் போது மக்கள் அடித்துக்கொண்டார்கள்? - காங்கிரஸ் கட்சிக்கு கங்கனா பதிலடி !

Update: 2021-11-14 04:00 GMT

எனது கேள்விக்கு பதிலளியுங்கள் பின்னர் விருதை திருப்பி தருகிறேன் என காங்கிரஸ் கட்சிக்கு நடிகை கங்கனா ரணாவத் பதிலடி குடுத்துள்ளார்.

நடிகை கங்கனா ரணாவத் தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் "1947ல் நம் நாடு பெற்றது சுதந்திரம் அல்ல, பிச்சை. உண்மையான சுதந்திரம் 2014ல் தான் கிடைத்தது" என கூறினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்தது. மேலும் அவரிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை பறிக்க வேண்டும் எனவும் கூறியது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக கங்கனா ரணாவத் கூறுகையில், "எனக்கு தெரிந்தவரை 1947-ம் ஆண்டில் எந்த போரும் நடக்கவில்லை. நடந்திருந்தால் அது பற்றி யாராவது எனக்கு சொல்லட்டும். வெள்ளையர்கள் நாட்டை ஏன் பிரித்தனர்?. 1947ல் சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்கு பதில், மக்கள் ஒருவருடன் ஒருவர் அடித்துக் கொண்டது ஏன்? எனது கேள்விக்கான பதில்களை யாராவது சொல்லட்டும். அதன்பின், 1947ல் பெற்ற சுதந்திரத்தை பிச்சை என கூறியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, எனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதையும் திருப்பிக் கொடுத்து விடுவேன்" என பதிலடி குடுத்துள்ளார்.


Source - Maalai malar

Tags:    

Similar News