சில ஆண்டுகளில் கேரளா மற்றொரு ஆப்கானிஸ்தானாக மாறும் ! - பா.ஜ. எம்.பி கேஜே அல்போன்ஸ் பரபரப்பு தகவல்!

கேரளாவில் பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்துவதாக எல்.டி.எஃப் மற்றும் யு.டி.எஃப் மீது பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான கே.ஜே.அல்போன்ஸ் பரபரப்பான குற்றம்சாட்டியுள்ளார்.;

Update: 2021-09-19 03:49 GMT

கேரளாவில் பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்துவதாக எல்.டி.எஃப் மற்றும் யு.டி.எஃப் மீது பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான கே.ஜே.அல்போன்ஸ் பரபரப்பான குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அடுத்து வருகின்ற 5 முதல் 10 ஆண்டுகளில் கேரளா மாநிலம் மற்றொரு ஆப்கானிஸ்தானாக மாறும் எனவும் அவர் கூறினார்.

இது குறித்து மேலும் பேசிய கே.ஜே. அல்போன்ஸ், கடந்த 25 ஆண்டுகளாக கேரளாவில் தலிபானேஷன் நடக்கிறது. இதனால் அடுத்து வருகின்ற 5 முதல் 10 ஆண்டுகளில் கேரளா மற்றொரு ஆப்கானிஸ்தானாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றார்.

இதனிடையே கேரள பாஜக பொதுச்செயலாளர் ஜார்ஜ் குரியன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் வாயிலாக வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் கேரளா ஜிஹாதி நடவடிக்கைகளைத் தடுக்க மத்திய அரசின் தலையீடு தேவை என குறிப்பிட்டுள்ளார்.

Source: Puthiyathalamurai

Image Courtesy: Kerala Kaumudi


Tags:    

Similar News