கொங்குநாடு சர்ச்சை பற்றி மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கருத்து !

கொங்குநாடு சர்ச்சை பற்றி - மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய்.

Update: 2021-08-03 16:15 GMT

தமிழகத்தை தனியாக பிரித்து கொங்கு நாடு உருவாகிறது என்ற விவாதத்திற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


தமிழகத்திலிருந்து கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக பிரிப்பதற்காக மத்திய அரசு திட்டம் தீட்டு வைத்திருப்பதாகவும் , அது விரைவில் நடக்கப்போகிறது எனவும், உறுதி செய்யப்படாத செய்திகள் உலா வந்தன. இந்த விவகாரம் இணையத்தில் முக்கிய பேசு பொருளாக மாறியது, குறிப்பாக தி.மு.க கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் இது தமிழகத்தை பிரிக்கும் செயல் எனவும், தமிழகத்தின் அமைதியை பா.ஜ.க சீர்குலைக்கிறது எனவும் வழக்கம்போல் மத்திய அரசை பற்றிய தவறான கருத்தை மக்கள் மத்தியில் பரப்பி வந்தனர்.


இந்நிலையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்துள்ள விளக்கத்தில், "தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் ஏதும் தற்போதைக்கு மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை" என கூறியுள்ளார். மத்திய அமைச்சரின் இந்த விளக்கத்தின் மூலம் கொங்கு நாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Asianet

Tags:    

Similar News