கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனீவாசன் முன்னிலை.!
பல கட்ட சுற்று முடிவுகளில் வானதி சீனிவாசன் குறைந்த வாக்கு வித்தியாசங்களில் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், தற்போது 1000 வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆரம்ப முதலே பின்னடைவை சந்தித்து வந்தார்.
பல கட்ட சுற்று முடிவுகளில் வானதி சீனிவாசன் குறைந்த வாக்கு வித்தியாசங்களில் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், தற்போது 1000 வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் உள்ளார்.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 45932 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். கமல்ஹாசன் 45042 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்து உள்ளார்.
இன்னும் இரண்டு சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மட்டுமே உள்ள நிலையில் வானதி சீனிவாசன் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.