'எங்களை ஏமாத்திட்டு 2024 தேர்தலில் எப்படி ஜெயிக்குறீங்கன்னு பார்க்குறோம்' - முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கொந்தளித்த அரசு ஊழியர்கள் சங்கம்

அவுட்சோர்சிங் முறையை கடைபிடிக்கும் தி.மு.க'வின் கார்ப்பரேட் மாடலுக்கு எதிராக போராடுவோம் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

Update: 2022-12-19 02:35 GMT

அவுட்சோர்சிங் முறையை கடைபிடிக்கும் தி.மு.க'வின் கார்ப்பரேட் மாடலுக்கு எதிராக போராடுவோம் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் குறித்து பேசி வரும் நிலையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜர் கார்ப்ரேட் மாடலைப் போல் செயல்பட்டு வருகிறார். இதற்கு அரசு ஊழியர்களும் சங்கம் எதிர்ப்பு கடுமையான போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளது உள்ளது.

இந்த அறிவிப்பை சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசு மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழக முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டம் முடிந்தபிறகு சங்கத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்படையினங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை அசைத்து பார்க்கும் அளவில் நடக்க இருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடக்க விடமுடியாதபடி செய்யும் அளவிற்கு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

2024 வரவுள்ள மக்களவைத் தேர்தலில் அரசு ஊழியர்களின் ஆறு சதவீத மக்கள் தான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும், தி.மு.க அரசின் தேர்தல் வாக்குறுதியை இனிமேல் நம்பப் போவதில்லை. தேர்தல் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும், எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார், எங்களுடைய கோரிக்கைகளுக்கு நிதி பற்றாக்குற காரணம் எனக் கூறுவது ஏற்க முடியாது. சமூக நீதிப் பேசும் தி.மு.க அரசு சமூகநீதியை சீர்குலைக்க கூடிய அரசாணைகளை கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணைகளை மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள 6 லட்சம் காலிப்பணங்களை இனிவரும் காலங்களில் அவுட்சோர்சிங் மூலம் தனியார் நிறுவனங்கள் வைத்து ஆட்களை நியமனம் செய்வதற்கு வழிவகை செய்யப்படுகிறது. தி.மு.க அரசு இரட்டைத்தன்மை கொண்ட அரசாக உள்ளது, எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு என தி.மு.க அரசு இரட்டைத்தன்மை கொண்டதாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


Source - The Tamil Hindu

Similar News