எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல் திருடு.. உதயநிதி ஸ்டாலின் மீது பா.ஜ.க. நிர்வாகி போலீசில் புகார்.!

ஒரு கட்சியில் நிர்வாகியாக உள்ள உதயநிதி இப்படி மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட செங்கலை திருடி வந்துள்ளாரே என்று பொதுமக்களும் பேசும் அளவிற்கு இருந்தது.

Update: 2021-03-26 13:35 GMT

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (25ம் தேதி) விளாத்திகுளத்தில் தேர்தல் பரப்புரை செய்தார்.

அப்போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய செங்கலை எடுத்து வந்துள்ளேன் என்று காண்பித்தார். இதனை உங்களுக்கு ஞாபகம் படுத்த எடுத்து வந்தேன் எனக்கூறினார். ஒரு கட்சியில் நிர்வாகியாக உள்ள உதயநிதி இப்படி மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட செங்கலை திருடி வந்துள்ளாரே என்று பொதுமக்களும் பேசும் அளவிற்கு இருந்தது. உதயநிதி ஸ்டாலின் செங்கலை காண்பித்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்த செங்கலை திருடியதாக அவர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


 



விளாத்திகுளம் காவல் நிலையத்தில் பாஜக நிர்வாகி அளித்துள்ள புகாரில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்க்காக பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களால் கடந்த 27.01.2019ம் தேதியில் அடிக்கல் நாட்டப்பட்து. அதனைத் தொடர்ந்து கடந்த 01.012.2020ம் தேதியன்று பூமி பூஜையுடன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 5.50 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மருத்துவமனை பாதுகாப்பிற்க்காக கட்டப்பட்டுள்ள சுற்றுச் சுவர் வளாகத்திற்க்குள் இருந்த செங்கலை திமுக-வின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருடி கொண்டு வந்துள்ளார். இதனை அவரே நேற்று (25.03.2021) விளாத்திக்குளம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பிராச்சார கூட்டத்தில் பேசினார். அதனை பொதுமக்கள் மத்தியில் காண்பித்தார்.




 


எனவே இந்திய தண்டனை சட்டம் பிரிவு 380ன் படி தண்டிக்க தக்க குற்றச் செயலாகும். அவர் மீது வழக்கு பதிவு செய்து அவர் திருடி வந்த செங்கலை கைபற்றி சட்டப்படி தண்டனை பெற்று கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது பாஜக நிர்வாகி புகார் அளித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News