ராஜபாளையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேட்புமனுத்தாக்கல் செய்தார்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வேட்புமனுத்தாக்கல் செய்து வருகின்றனர். இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம், எடப்பாடியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

Update: 2021-03-15 08:10 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வேட்புமனுத்தாக்கல் செய்து வருகின்றனர். இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம், எடப்பாடியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

அதே போன்று மற்ற மாவட்டங்களில் அதிமுக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கல்யாணகுமாரிடம், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

Similar News