ரஜினி கட்சியில் இணைய காத்திருக்கும் திரையுலக பிரபலங்கள்.!

ரஜினி கட்சியில் இணைய காத்திருக்கும் திரையுலக பிரபலங்கள்.!

Update: 2020-12-18 17:15 GMT

திரு.ரஜினிகாந்த் அவர்களின் கட்சி துவக்கம் பற்றிய அறிவிப்பு வெளியான நாள்முதல் அதன் பரபரப்பும், கட்சி அறிவிப்பு பற்றிய எதிர்பார்ப்பும் மக்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில் திரு.ரஜினிகாந்த் அவர்கள் கட்சி துவங்கிய உடன் தமிழ் திரையுலகை சார்ந்த பல நட்சத்திரங்கள் திரு.ரஜினிகாந்த் அவர்களின் கட்சியில் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தற்பொழுது "அண்ணாத்த" படப்பிடிப்பில் பங்கேற்று வரும் திரு.ரஜினிகாந்த் அவர்கள் வரும் டிசம்பர் 31'ம் தேதி தனது கட்சி பற்றிய அறிவிப்பையும், வரும் ஜனவரியில் கட்சி துவக்கத்தையும் முடிவு செய்திருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தமிழ் திரையுலக வட்டாரத்தில் திரு.ரஜினிகாந்த் அவர்களின் கட்சியில் இணைந்து பணியாற்ற பிரபல நடிகர் மற்றும் நடிகைகள்.

இயக்குனர்கள் போன்றோர் பெருமளவில் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட போவதாகவும், கட்சி பணிகளில் ஈடுபடபோவதாகவும் சில முக்கிய திரையுலக பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஏற்கனவே மற்ற கட்சிகளில் இருந்து விலகி திரு.ரஜினிகாந்த் அவர்களின் கட்சிக்கு மாற பல அனுபவம் வாய்ந்த அரசியல் பிரமுகர்களும்,  சில முக்கிய நிர்வாகிகளும் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் மற்ற கட்சியினருக்கு அதிர்ச்சியளிப்பதாக சில முக்கிய தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் தற்பொழுது கட்சி மேலிடத்தால் அதிருப்தி'யில் இருக்கும் சில முக்கிய அரசியல் பிரமுகர்கள் கூட திரு.ரஜினிகாந்த் அவர்களின் கட்சியில் இணைய தருணம் பார்த்துக்கொண்டிருப்பதாக தெரிகிறது.

Similar News