செங்கல்பட்டில் வார்டு உறுப்பினர் பதவி ரூ.24 லட்சத்துக்கு ஏலம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சியில் வார்டு உறுப்பினர் பதவியை ரூ.24 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-02-02 02:29 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சியில் வார்டு உறுப்பினர் பதவியை ரூ.24 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி மற்றும் 4 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள் உள்ளது. இதற்கான தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், மதுராந்தகத்தை அடுத்துள்ள இடைக்கழிநாடு பேரூராட்சியில் 14வது வார்டு உறுப்பினர் பதவியை அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் ரூ.24 லட்சத்துக்கு ஏலம் விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இதற்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Source: Daily Thanthi

Image Courtesy: India Tv

Tags:    

Similar News