கந்தசஷ்டியை இழிவுபடுத்திவிட்டு, திருத்தணியில் முட்டி போட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட தி.மு.க.வினர்!

திருத்தணி திமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டி, திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள அடிவாரத்தில் இருந்து கோவில் சன்னதி வரைக்கும் முட்டி போட்டு 20 திமுகவினர் ஏறிச்சென்றனர்.

Update: 2021-04-02 12:04 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சட்டமன்ற தொகுதியில் 25 வருடங்களுக்குப் பின்னர் திமுக போட்டியிடுகிறது. எஸ்.சந்திரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் இந்துக்களிடம் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் போகும் இடமெல்லாம் அவருக்கு எதிர்ப்பு மட்டுமே மக்களிடம் கிடைத்து வருகிறது.

இதற்கு காரணம் கந்தசஷ்டி கவசத்தை திமுகவை சேர்ந்தவர்கள் மிகவும் இழிவுப்படுத்தினர். இந்த சம்பவம் இந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் பாடம் புகட்டுவோம் என்று ஒட்டு மொத்த இந்துக்கள் காத்திருக்கின்றனர்.




இந்நிலையில், திருத்தணி திமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டி, திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள அடிவாரத்தில் இருந்து கோவில் சன்னதி வரைக்கும் முட்டி போட்டு 20 திமுகவினர் ஏறிச்சென்றனர்.

இவர்களின் நாடகத்தை கோவிலில் இருந்தவர்களே நம்பவில்லை, திமுகவினர் கழுத்தில் அவர்களின் கட்சிக்கொடி அணிந்திருந்தனர். எனவே திமுகவினரை இந்துக்கள் நம்ப தயாராக இல்லை. ஓட்டுக்காக தற்போது முட்டி போட்டு நடப்பார்கள், பின்னர் வெற்றிபெற்ற பின்னர் இந்துக்கோவில்களை இடிப்போம் என்று பேசி வருவார்கள் என இந்துக்கள் தெரிவித்தனர்



Similar News