கார்டுவெல்லின் அடிவருடிகள் "நான் திராவிடன்" என கூறி பிரிவினையை தூண்டுகிறார்கள் - கொதிக்கும் நாராயணன் திருப்பதி !
Breaking News.
"ஆங்கிலேயர் கால்டுவெல்லின் அடிவருடிகள், நம் இனிய தமிழை ஒழிக்க நினைக்கிறார்கள்" என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
"சங்க இலக்கியங்களைச் சந்தி பிரித்து, எளிமைப் பதிப்புகளாகவும், `திராவிடக் களஞ்சியம்' என்ற தொகுப்பு நூலையும் தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கூட்டு வெளியீடுகளாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்" என தி.மு.க அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதற்கு தனியார் பத்திரிக்கை ஒன்றில் கருத்து தெரிவித்த பா.ஜ.க செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணன் கூறியதாவது, "தமிழ் காட்டுமிராண்டி மொழி' என்று கூறியவரின் வழிநடப்பவர்கள், தமிழ் நூல்களைத் `திராவிடக் களஞ்சியம்' என்று அடையாளப்படுத்த முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திராவிட இனம் என்ற போலி கருத்துருவாக்கம் அந்த உயிரை அழிக்க நினைத்து, அந்நியர்களால் உருவாக்கப்பட்ட சூழ்ச்சியே. தமிழை, தமிழர்களை, தமிழ்க் கலாசாரத்தை, தமிழ் மொழியின் பெருமைகளைச் சீர்குலைத்து திராவிடம் என்ற சொல்லை இந்தியாவில் விதைத்து, பிரிவினைக்கு வித்திட்ட ஆங்கிலேயர் கால்டுவெல்லின் அடிவருடிகள், நம் இனிய தமிழை ஒழிக்க நினைத்து தமிழின் அடையாளத்தை அழிக்க நினைக்கிறார்கள். நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவதன் மூலம் தமிழ்நாட்டில் பிரிவினையைத் தூண்ட தி.மு.க நினைக்கிறது" என கூறியுள்ளார்.