தொகுதி குறைவு.. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகல்.!

கேட்ட தொகுதிகள் கிடைக்கப்படாத காரணத்தால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவித்துள்ளது.

Update: 2021-03-09 08:04 GMT

கேட்ட தொகுதிகள் கிடைக்கப்படாத காரணத்தால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவித்துள்ளது.

இது பற்றி தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெறவுள்ள 2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.


 



தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களுடனான அவசர ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒறை கருத்தின் அடிப்படையில், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் அதிமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பு இல்லை என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Similar News