நீட் தேர்வு விலக்கு வாங்கிருவோம்'ன்னு நினைக்கிறோம் ! - ஆருடம் கூறும் துரைமுருகன் !

Breaking News.

Update: 2021-09-22 01:00 GMT

"நீட் தேர்வு விலக்கு சட்ட ரீதியாக வாய்ப்பில்லை என எதிர்க்கட்சிகள் கூறினாலும் எங்களின் தீர்மானம் வெற்றி பெறும் என்று நாங்கள் நினைக்கிறோம்" என தி.மு.க அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "அ.தி.மு.க'வினர் தேர்தலில் வார்டு வரையறையில் குளறுபடிகள் உள்ளதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால், இதையெல்லாம் மாற்றியதே அ.தி.மு.க'தான். நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது பிரகாசமான வெற்றி பெற்றோம். இப்போதும் அதே போல் வெற்றி பெறுவோம். கூட்டணி கட்சிகளுக்கு கேட்ட இடங்களை ஒதுக்கியுள்ளோம். கட்சிகள் மன மகிழ்ச்சியுடன் சென்றுள்ளனர். நீட் தேர்வு விலக்கு சட்ட ரீதியாக வாய்ப்பில்லை என எதிர்க்கட்சிகள் கூறினாலும் எங்களின் தீர்மானம் வெற்றி பெறும் என்று நாங்கள் நினைக்கிறோம்''என அவர் தெரிவித்தார்.


Source - Asianet NEWS

Tags:    

Similar News