அடுத்து நம்மள சுத்துப்போட்டாங்களா....! நடுங்கி பதுங்கி அமைச்சர் சேகர்பாபு செய்த காரியம்...!

Update: 2023-09-25 14:58 GMT

பூதாகாரமாகும் விவகாரம்...! மெல்ல பதுங்கும் அமைச்சர் சேகர்பாபு...!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கூட்டம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் சேகர்பாபு கலந்து கொண்டது இன்று சேகர்பாபுக்கே பெரிய வினையாக திரும்பி உள்ளது, சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி பேசியது இந்திய அளவில் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்து கொண்டு அந்த கூட்டத்தில் காவி வேட்டி கட்டிக்கொண்டு போய் உட்கார்ந்ததற்கு சும்மா விட மாட்டேன் என்று கூறிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த போராட்டத்தின் காரணமாக சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சேகர் பாபு அடுத்த சில நாட்களில் 'சனாதனம் என்பதை எதிர்க்கவில்லை சனாதனத்தில் உள்ள ஒரு சில கோட்பாடுகளை தான் நாங்கள் எதிர்க்கிறோம்' என கூறி மழுப்ப ஆரம்பித்தார்.

மேலும் உதயநிதி பேசியது தேசிய அளவில் சர்ச்சையானது தொடர்ந்து டெல்லியில் வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது, இந்த உச்ச நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கு அடிப்படையாக வைத்து உச்சநீதிமன்றத்தில் இருந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் உதயநிதி மற்றும் அமைச்சர் சேகர்பாபு, திருமாவளவன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் பறந்தது.

இந்த நோட்டீஸ்க்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் அமைச்சர் உதயநிதி மற்றும் அமைச்சர் சேகர்பாபு தள்ளப்பட்டனர், அமைச்சராக இருந்து கொண்டு இது போன்று செயல்களில் ஈடுபடுவது மரபை மீறிய செயல் என அரசியல் விமர்சகர்கள் கூறி வந்த நிலையில் எப்படி இதை சமாளிக்க போகிறோம் என்கின்ற ரீதியில் தற்பொழுது திமுக தரப்பு குழம்பிப் போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த விவகாரத்தை லேசில் விடப்போவதில்லை என வட மாநிலங்களில் இருந்து தீவிரமான நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு இறங்கி உள்ளனர் எனவும் இதனால் எங்கே அடுத்தபடியாக அமைச்சர் பதவிக்கு பங்கம் வந்துவிடுமோ என தெரிந்து அமைச்சர் சேகர் பாபுவும் பதுங்கியுள்ளனர் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அமைச்சர் சேகர்பாபு பேச்சில் மாறுதல் தெரிகிறது அதற்க்கு காரணம் இந்த நீதிமன்ற நோட்டீஸ் தான் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சேகர்பாபு "தமிழ்நாட்டில் ஆன்மிகத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர்" என்று விமர்சித்துள்ளார். மேலும் பேசிய அவர் "அமைதி பூங்காவான தமிழகத்தில், ஆன்மீகத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர்" என கூறிவிட்டு சனாதன விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி விடுவார்களோ பயந்து அடுத்தபடியாக பேச்சை மாற்றி 'கடந்த 2 ஆண்டுகளில் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்' என்றார் அமைச்சர் சேகர்பாபு .

மேலும் சனாதன விவகாரம் I.N.D.I.A கூட்டணியில் இருந்து திமுகவை விரட்டிவிடும் நிலையில் விஸ்வரூபம் அடைந்திருப்பதையும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர், இனிவரும் நாட்களில் சனாதனத்தை குறித்து திமுக பேசுவதற்கு அச்சப்படும் அந்த அளவிற்கு ஒரு புறம் அமைச்சர்களுக்கு நோட்டீஸ், மறுபடியும் கூட்டணியிலிருந்து திமுகவை விரட்டுவது போன்ற பல விஸ்வரூபங்கள் திமுகவிற்கு எதிராக உருவாக ஆரம்பித்துவிட்டது எனவே திமுக தரப்பில் இருந்து தெரியாமல் பேசி விட்டோமா என எண்ணி வருந்துகிறது எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் குறிப்பாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை குறி வைத்து அண்ணாமலை போராட்டம் நடத்தியதிலிருந்து சேகர்பாபு சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சை சற்று குறைத்துக் கொண்டார் அண்ணாமலை போராட்டம் நடத்தினார் என்பதாலேயே தற்பொழுது அமைச்சர் சேகர்பாபு அடங்கிவிட்டார் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Similar News