'பெருமாளே காப்பாத்துப்பா'.... சனாதன விவகாரம் கொடுத்த அடியால் மிரண்ட உதயநிதி...!

Update: 2023-10-10 17:20 GMT

அண்ணாமலை சொன்னது உதயநிதி விவகாரத்துல அப்படியே நடக்குதேப்பா...!

சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட சனாதன ஒழிப்பு மாநாடு தேசிய அளவில் திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியது, அந்த மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'சனாதனத்தை ஒழிக்க வேண்டும்' என பேசியது திமுகவிற்கு இது நாள் வரையில் வரலாற்றில் இல்லாத பின்னடைவை ஏற்படுத்தியது.

மேலும் தேசிய அளவிலிருந்து திமுக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகள் கூட்டணியில் இருந்து ஒதுக்கப்படும் நிலையும் ஏற்பட்டது. இது மட்டுமல்லாமல் தற்பொழுது நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்படி அதில் பங்கேற்கலாம்? அவருடன் சேர்த்து அமைச்சர் சேகர்பாபுவும் அதுவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்து கொண்டு எப்படி அந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாம் என பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்த நிலையில் சனாதன எதிர்ப்பு திமுகவிற்கு பின்னடைவு தான் அதை அவர்கள் தொட்டிருக்கக் கூடாது என திமுகவின் ஆதரவாளர்களே கூறும் அளவிற்கு அமைந்துவிட்டது. இந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் எப்படி பார்த்தாலும் சனாதன ஒழிப்பு விவகாரம் நமக்கு பின்னடைவை என திமுக உணர்ந்து விட்டதாக தெரிகிறது என அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சனாதனம் பற்றிய பேச்சு பின்னடைவை ஏற்படுத்தியுள்ள சூழலில் 'உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை' சார்பில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்ததாகும், அதிலும் மூன்றாவது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் அதிக கூட்டம் இருக்கும், இந்த நிலையில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை அன்று வைணவ தலங்களில் முக்கிய தலமான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் அதிகம் வருகை புரிந்த இடத்தில் பெருமாளை தரிசிக்கும் பக்தர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் நேற்று தரிசனம் செய்த பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

காலை நடை திறந்தது முதல் நள்ளிரவு நடை சாத்தும் வரை 12,000 மேற்பட்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தை உதயநிதிக்கு சொல்லியது ஒரு முக்கிய அரசியல் பிரமுகர் என தகவல்கள் கசிந்துள்ளது. இப்படி பெருமாளுக்கு அன்னதானம் செய்வது புண்ணியம் அதுமட்டுமல்லாமல் தற்பொழுது சனாதனத்தை பற்றி பேசும் நிலையில் இந்த அன்னதான விவகாரம் உங்களுக்கு கை கொடுக்கும் என கூறியதாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மட்டுமல்லாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை பேசும் போது சனாதன விவகாரத்தை வைத்து தேர்தலை சந்திக்க திமுக தயாரா? தேர்தல் நெருங்க நெருங்கிய இவர்கள் வேல் எடுத்து சுற்றுவார்கள், நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் என கூறியது போலவே தற்பொழுது தேர்தல் நெருங்க நெருங்க புரட்டாசி சனிக்கிழமை அன்னதானம் என்பது போன்ற விவகாரங்களில் திமுகவினர், திமுகவினர் சார்ந்த அறக்கட்டளை இறங்கி உள்ளது அண்ணாமலை கூறியது போலவே நடந்து விட்டது என விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

மேலும் பிரதமர் மோடி வேறு தமிழக அரசு கோவில்களை ஆக்கிரமித்துள்ளது என கூறிய விவகாரம் வேறு விஸ்வரூபம் எடுத்திருப்பது திமுகவிற்கு சிக்கல்தான் என விமர்சனங்கள் எழுந்துள்ளது... நேற்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருக்கடையூரில் அறுபதாம் திருமணம் செய்தார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் புரட்டாசி சனிக்கிழமைக்கு அன்னதானம் வேறு வழங்கப்பட்டிருப்பது இணையத்தில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது...

Similar News