ஏலகிரி ஆடியோ, மணல் ஊழல் டாக்குமெண்ட். - துரைமுருகனுக்கே தண்ணி காட்டும் திமுக உடன்பிறப்பு....
நீலகிரி ஆடியோ! மணல் ஊழல் ஆவணங்கள்! துரைமுருகனை சிக்கவைக்க இறங்கிய திமுக நிர்வாகி..
திமுக நிர்வாகி குடியாத்தம் குமரன் சமூகவலைத்தளங்களில் அடிக்கடி வீடியோ வெளியிடுவார், அதன் காரணமாகவே இவர் சர்ச்சைகளுக்கு பெயர்போனவர். கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் ஆகியோரை விமர்சித்த காரணத்தினால் இவர் மீது காவல்துறையில் வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், இதுகுறித்து தனது முகநூல் பதிவில் குடியாத்தம் குமரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், 'என்னை நீக்க பார்க்கிறார்கள், என் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறேன்' என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
குடியாத்தம் குமரன் இது சம்பந்தமாக பேசும் போது கூறியதாவது 'முகநூல் பக்கத்தில் அப்படி பதிவிட்டது உண்மைதான், நான் குடியாத்தம் பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளிடம் பணம் வசூல் செய்வதாக என்னிடம் கட்சியினர் யாரும் பேசக்கூடாது என்று கதிர் ஆனந்த் கட்டளை போட்டிருக்கிறார். நான் கதிர் ஆனந்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதற்கு உரிய பதில் சொல்லவில்லை, நான் மண்ணுக்குள் போகும் வரை திமுகவின் உடன்பிறப்பு தான். அமைச்சர் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் ஆகிய இருவரும் ஏலகிரி மலை பங்களாவில் பேசிய முக்கியமான ஆடியோ பதிவுகளை வைத்திருக்கிறேன். மணல் விவகாரங்களில் நடந்த ஊழல் சம்பந்தமான ஆவணங்களும் கிடைத்து இருக்கின்றன அவற்றையெல்லாம் விரைவில் வெளியிடுவேன் அதே சமயம் எந்த நேரத்திலும் என் குடும்பத்தாருடன் கைது செய்யப்படலாம்' என பல குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.
இது குறித்து அமைச்சர் துரைமுருகன் தரப்பு மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது, அமைச்சர் துரைமுருகன் இதுகுறித்து கூறும்போது 'குடியாத்தம் குமரன் பகல் நேர குடிகாரர், அவர் மீது அவதூறு வழக்குகள் இருக்கின்றன! கட்சியில் இருந்து கொண்டே அமைச்சர் பற்றியும் கதிர் ஆனந்த் பற்றியும் சில ஆண்டுகளாக தவறாக பேசி வருகிறார். இதில் எதுவும் உண்மை இல்லை! ஆதாரங்கள் இருந்தால் வெளியிடச் சொல்லுங்கள், ஒவ்வொரு முறையும் இப்படி ஏதாவது சொல்லி விட்டு கடைசியில அமைச்சர் துரைமுருகன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்' என துரைமுருகன் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.