இந்துக்கள் பற்றிய ராகுல் காந்தியின் பேச்சு.. நச்சுனு பதிலடி கொடுத்த பா.ஜ.க மூத்த தலைவர்..

Update: 2024-07-10 16:31 GMT

இம்மாதம் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி முதல் முறையாக உரையாற்றினார். அப்போது, ராகுல்காந்தி மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. குறிப்பாக ராகுல் காந்தி பாஜகவையும், இந்து மக்களையும் குறி வைத்து வன்மமான கருத்துக்களை பகிர்ந்து இருப்பார். இது குறித்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் சரியான பதிலடியை தற்போது கொடுத்து இருக்கிறார். குழப்பம் மற்றும் பொய்களை மட்டுமே ராகுல் காந்தி பரப்புகிறார் என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் கூறினார்.

ராகுல் காந்தி அப்படி என்னதான் கூறினார்?

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த சனிக்கிழமை அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அயோத்தியில் பாஜகவை தோற்கடித்ததன் மூலம், பாஜக மூத்த தலைவர் அத்வானியால் தொடங்கப்பட்ட ராமர் கோயில் இயக்கத்தை இண்டியா கூட்டணி தோற்கடித்துள்ளது" என்றார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு பாஜக மத்தியில் பெரும் கண்டனத்திற்கு உள்ளானது.


பாஜக மூத்த தலைவரின் பதிலடி:

இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் கூறும் போது, "ராகுல் காந்தி இன்னும் முதிர்ச்சி அடையாத சிறுபிள்ளைத்தனமானவர். அவர் இன்னும் எதிர்க்கட்சித் தலைவருக்கான பக்குவத்தை பெறவில்லை. ராமஜென்மபூமி இயக்கத்தை நாங்கள் தோற்கடித்தோம் என்கிறார். ராமர் எங்கள் வாழ்க்கை, எங்கள் கடவுள், இந்தியாவின் அடையாளம். இந்த இயக்கம் பல முறை காங்கிரஸை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்து, தெய்வீக மற்றும் பிரம்மாண்டமான கோயிலை கட்டுவதற்கு வழி வகுத்துள்ளது, ஆனால் ராகுல் காந்தி பொய்களை சொல்கிறார். அவருக்கு பொய் சொல்வது, குழப்பத்தை பரப்புவதை தவிர வேறு எதுவும் தெரியாது. அதனால் தான் ராகுல் சிறுபிள்ளைத்தனமாக தனது மனதில் தோன்றியதை எல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்" என ராகுல் காந்தியின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இவ்வாறு பதிலடி கொடுத்து இருக்கிறார்.

Input & Image courtesy:

Tags:    

Similar News