ஆர்.எஸ்.எஸ்-ஐ சீண்டி பார்த்த ராகுல் காந்தி.. பா.ஜ.க கொடுத்த சரியான பதிலடி..

Update: 2024-09-11 14:40 GMT

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். தன்னுடைய சுற்றுப்பயணத்தின் போது இந்தியாவின் சார்பாக பல்வேறு விஷயங்களை அவர் தவறான விதத்தில் பதிவு செய்து வருகிறார். அதற்காக அங்கு சில எதிர்ப்புகளும் கிளம்பி வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று இருந்தாலும் எதிர்க்கட்சியினரை எப்படி தாக்க வேண்டும் என்று யுத்தியில் அங்கு போய்யும் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஐ பற்றி கடுமையான தவறான விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார். இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்த ஒரு பேச்சுக்கு பாஜக சரியான பதிலடி கொடுத்து இருக்கிறது.


ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ராகுல் சேர்ந்து பயிற்சி எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கூறி உள்ளார். ஆர்.எஸ்.எஸ் இயக்கம் என்றால் என்ன? அதனுடைய வரலாறு எப்படிப்பட்டது? என்பதை கூட அறியாமல் அன்னியர் நாட்டில் போய் தற்போது இத்தகைய கருத்துக்களை பதிவு செய்து இருக்கும் ராகுல் காந்திக்கு கடுமையான கண்டனங்களும் இந்தியாவில் இருந்து வழுத்து வருகிறது.


மேலும் சரியான புரிந்து கொள்ளல் இல்லாமல் ஆர்.எஸ்.எஸ் குறித்து ராகுல் கூறிய விமர்சனம் தவறானது. இந்த இயக்கத்தை பற்றி அவர் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக அவர் இதில் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அதை ராகுல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்து அவர் பயிற்சி பெற வேண்டும்" என்று வேண்டுகோளையும் பாஜக செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Organiser News

Tags:    

Similar News