விநாயகர் சதுர்த்திக்கு ஆசைப்படாத விஜய், விநாயகர் சிலைகளை உடைத்த இந்து விரோத ஈ.வே.ராக்கு மரியாதை!

Update: 2024-09-17 13:18 GMT

தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான நடிகர் விஜய், பெரியார் என்று அவரைப் பின்பற்றுபவர்களால் போற்றப்படும் ஈ.வி.ராமசாமி நாயக்கரின் அரசியல் கொள்கைகளைப் பின்பற்றுவேன் என்று பகிரங்கமாக மீண்டும் உறுதிப்படுத்தியதாகத் தெரிகிறது. சமீபத்தில் பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் திடலுக்கு அவர் சென்றிருந்தபோதை அடுத்து அரசியல் வட்டாரங்களில் இது பேசு பொருளாக மாறி உள்ளது. 

ஈ.வெ.ரா.வின் நினைவிடத்திற்குச் சென்ற விஜய், பெரியார் மற்றும் தி.மு.க.வின் சித்தாந்தங்களோடு இணைந்திருப்பதைக் கோடிட்டுக் காட்டும் வகையில், வெறுங்காலுடன் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 


மேலும் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில், சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்; மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்; சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்! என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக ஈ.வே.ரா கடவுள் சிலைகளை உடைக்க வேண்டும் அதன்படி எதை தொடங்க வேண்டுமானாலும் விநாயகரிடம் இருந்து தொடங்க வேண்டும் என்பதால் முதலில் விநாயகர் சிலையை உடைக்க வேண்டும் என்று 1953 இல் ஒரு உரையில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கியது. 'மதராஸ் மாநிலம் என்ற பெயரைத் 'தமிழ்நாடு' என மாற்றியது, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில், அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம் என்று அண்ணாவின் பிறந்தநாளுக்கு விஜய் பதிவிட்டு இருந்தார். 

ஓணம் , ரம்ஜான் , ஈஸ்டர் மற்றும் தொழிலாளர் தினம், சுதந்திர தினம் போன்ற நடுநிலையான விசேஷ நாட்களைப் போன்று தமிழ் புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி போன்ற இந்து பண்டிகைகளுக்கு இந்துக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதை விஜய் மிகவும் அப்பட்டமாக தவிர்த்துள்ளார்.

இது போன்ற செயல்கள், விஜய்யும் திராவிட சித்தாந்தப் பாதையில் நடப்பதால், அவரது கட்சி திமுக 2.0 தவிர வேறில்லை என்ற கூற்றுகள் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதோடு அப்படியானால், தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து திராவிட வெற்றிக் கழகம் என்று தனது கட்சியின் பெயரை மாற்றுவது குறித்து விஜய் பரிசீலிக்க வேண்டும் என்று கமெண்டுகள் எழுந்துள்ளது. 

Tags:    

Similar News