சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அண்ணாமலை இன்னும் ஆறு மாதம் தான் உள்ளது அனைவரது நோக்கமும் திமுகவை விட்டுக்கு அனுப்புவது தான் திமுக கட்சியின் மீது மக்கள் அனைவரும் கோபத்தில் உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றம் தற்போது பெருகி வருகிறது. எங்களுக்கு பாஜக கட்சியை வளர்ப்பதற்கு இது முக்கிய நேரமாக பார்க்கிறோம். கடினமாக உழைக்கிறோம். பாஜக கூட்டணி வலிமை அடைந்து வருகிறது.
பல பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப் படவில்லை. அரசு பள்ளிகளில் மட்டும் உங்கள் மொழிக் கொள்கையை திணிக்காதீர்கள் என சொல்கிறோம். அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி மக்களின் பிரச்சினை திசை திருப்புகின்றனர். பாஜக வளர்ந்து வரும் போது கண்டிப்பாக திமுக அரசு வீட்டிற்கு சென்று இருக்கும். எங்களுக்கு யாரும் எதிர் கிடையாது கூட்டணியில் யார் வருவார்கள் என்பது குறித்து எதிர்காலத்தில் தான் பேச முடியும். திமுக கட்சியினர் படத்திலிருந்து மீனவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர்.
அவர்களின் பெயரை பயன்படுத்தி போதைப் பொருள்களை கடத்தி வருகின்றனர் இதனால் நல்ல மீனவர்களும் கைது செய்யப்படுகின்றனர்.கூட்டணி குறித்த அவசரத்தில் பேச முடியாது இரண்டு நாட்களில் அமித்ஷா தமிழகம் வரும்போது மாற்றங்கள் வரும். ஓட்டுக்கள் சிதறாமல் ஒருங்கிணைந்து மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவது தான் எங்களின் தலையாகிய கடமை அது 2026 இல் நடக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.