பாஜகவில் இருக்கும் நாங்களும் தமிழர்களே!குறையும் தமிழ் தேர்ச்சி விகிதம்!தமிழிசை அதிரடி கேள்வி!

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலில் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது ஆனால் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் முருகனின் அருள் திமுக அரசுக்கு உள்ளதாக கூறுகிறார் அப்படி இருக்குமானால் இஃப்தார் நோன்பு திறப்பு மற்றும் தேவாலயங்களுக்கு செல்ல முதல்வர் முருகன் கோவிலுக்கு ஏன் வர தயங்குகிறார்
மத்திய அரசு அறிவிக்காத சொல்வது மறு சீரமைப்பிற்கு குழுவை அனுப்பியுள்ள முதல்வர் காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் ஏன் குழுவை அனுப்பி தீர்வு காண முயற்சிக்காமல் இருக்கிறார் தமிழிற்காக தமிழக அரசு தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதற்காக எத்தனை பல்கலைக்கழகங்களை நிறுவியுள்ளது என்று கூற முடியுமா தமிழகத்தின் இன்று எத்தனை கல்வி நிறுவனங்களில் தமிழ் வழி கல்வி உள்ளது என்று கூற முடியுமா
தமிழின் தேர்ச்சி விகிதமும் குறைந்து கொண்டே இருக்கிறது தமிழ் தமிழ் என வெறும் வாயில் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் தமிழ் மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல பாஜகவில் உள்ள நாங்களும் தமிழர்கள் தான் என்ன தெரிவித்துள்ளார் மேலும் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தால் நாங்களே ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறியுள்ளார்