அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் மாற்றான் தாய் பிள்ளைகளா!கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த திமுக கவுன்சிலர் கணவர்!

Update: 2025-06-15 14:46 GMT

அரசு பள்ளி மாணவர்களை கட்டிட வேலை கழிப்பறை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளில் திமுக கவுன்சிலரின் கணவர் செய்ய வைத்ததாக வெளியான தகவலுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார் அதாவது கோவை மாவட்டம் பொள்ளாச்சி சமத்தூர் ராமஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களை நான் முதல்வன் திட்டம் என்று பொய் கூறி திமுக கட்சி நிகழ்ச்சிக்கு வர வற்புறுத்தியிருக்கிறார் அந்தப் பகுதி திமுக கவுன்சிலரின் கணவர்

கட்டிட வேலை செய்ய வைப்பது, கழிப்பறைகளை கழுவச் செய்வது பள்ளியை சுத்தம் செய்வது என அரசுப் பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக அரசு பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை

இந்த நிலையில் திமுக கட்சி நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க அரசுப் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்த முயற்சிக்கும் திமுகவின் அகங்காரச் செயல்பாட்டினை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார் 

Tags:    

Similar News