காதலர் தினத்துக்கு எதிர்ப்பு: நாய்களுக்கு, கழுதைகளுக்கு திருமணம் செய்த இந்து முன்னணி!
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்களுக்கும், கழுதைகளுக்கும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் திருமணங்களை செய்து வைத்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
காதலர் தினத்துக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. காதலர்களாக சுற்றி திரிபவர்களுக்கு உடனடியாக திருமணம் செய்து கொள்வதற்காக கையில் தாலிகளுடன் இந்து அமைப்புகள் காத்திருந்தனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தென்சிறுவளூர் என்ற பகுதியில் காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் நாய்களுக்கு திருமணம் செய்து தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.
அதே போன்று நெல்லையிலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே பிராஞ்சேரி என்ற கிராமம் உள்ளது. அங்கு இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் 2 நாய்களுக்கு மாலை அணிவித்து அதற்கு திருமணம் செய்து வைத்தனர். இது பற்றி அவர்கள் பேசுகையில், காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இது போன்று நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Source, Image Courtesy: Daily Thanthi