பென்னாகரம் தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் ஜி.கே.மணி வாக்கு சேகரிப்பு.!
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. அத்தொகுதியில் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி போட்டியிடுகிறார்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. அத்தொகுதியில் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி போட்டியிடுகிறார்.
இதனையொட்டி காலை 6 மணி முதல் தனது பிரச்சார பயணத்தை தொடங்கி விடுகிறார். பென்னாகரம் தொகுதிகுட்பட்ட நல்லாம்பட்டி, ஆதனூர் ஊர்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது வணிகர்களிடம் சென்று தனக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார். இதன் பின்னர் எழும்பு முறிவு சிகிச்சை மையத்தில் வெளியே இருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார்.
இதன் பின்னர் அடிபட்டு காலில் கட்டுப்போட வந்திருந்த நபரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
கடந்த 2 முறை பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனால் எந்த சுபகாரியம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார். கட்சி பாகுபாடின்றி அனைவரிடத்திலும் அன்பாக பழகி வருவதால், தொகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.