"மக்கள் அச்சப்பட வேண்டாம். பெட்ரோல், டீசல் விலை விரைவில் கட்டுக்குள் வரும்" - அண்ணாமலை!

"மக்கள் அச்சப்பட வேண்டாம். பெட்ரோல், டீசல் விலை விரைவில் கட்டுக்குள் வரும்" - அண்ணாமலை!

Update: 2021-02-23 09:09 GMT

மக்கள் அச்சப்பட தேவையில்லை 
பெட்ரோல், டீசல் விலை விரைவில் கட்டுப்படுத்தப்படும் என பா.ஜ.க மாநில  துணைத்தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் பா.ஜ.க நிர்வாகி இல்ல  விழாவில் பா.ஜ.க மாநிலத் துணைதலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர கூறியதாவது,  "தர்மேந்திர பிரதான் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரி விதிப்பில் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார், வருமான இழப்பு வரும் என்பதால் மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அளவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை கொண்டு விலை நிர்ணயம் செய்து வருகிறோம். மக்கள் அச்சப்பட தேவையில்லை. பெட்ரோல், டீசல் விலை விரைவில் கட்டுப்படுத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், "விழுப்புரத்தில் அமித்ஷா பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ளது. பெண்கள் பா.ஜ.க'வின் பக்கம் சாய்ந்து உள்ளனர். சசிகலாவை அ.தி.மு.க'வில் இணைக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை" என கூறினார்.

Similar News